செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக மாறியுள்ளது. நாம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளும் மாற்றங்களும் குவிந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்த அபார வளர்ச்சியானது மனிதகுலத்திற்குப் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும், கவலையும் உலக நாடுகளிடையே தற்பொழுது தீவிரமாக எழுந்துள்ளது. குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடக்கூடும் என்ற விவாதம் தற்பொழுது தொழில்நுட்ப உலகையே உலுக்கி வருகிறது.
பிரபல ‘க்ளாட்’ (Claude AI) டூலை உருவாக்கிய ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து சமீபத்தில் தனது கவலைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். புளூம்பெர்க் ஆவணப்படம் ஒன்றில் பேசிய அவர், ஏஐ டூல்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வரை, அதன் அதிவேக வளர்ச்சியை உலகளாவிய நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்பம் ஏதேனும் பெரும் விபரீதத்தை ஏற்படுத்தினால், ஒருகட்டத்தில் அதனைத் தடை செய்வது கூட முற்றிலும் நியாயமானது என்று அவர் எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே லாபத்தை நோக்கிய போட்டி நிலவினாலும், பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. சாட்ஜிபிடியை உருவாக்கிய ‘ஓபன் ஏஐ’ (OpenAI) நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்கள் பலர், பாதுகாப்பு குறித்த கவலைகளால் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக, அதன் சிஇஓ சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக மன்னிப்பு கோரியதுடன், எதிர்காலத்தில் பாதுகாப்பான ஏஐ-ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார். மற்றொருபுறம், ஏஐ வளர்ச்சியால் தங்களது வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற பயம் வயது, பாலின வேறுபாடின்றி 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க மக்களிடையே பரவலாக உள்ளதாக ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இந்தச் சூழலைச் சமாளிக்க, மருந்து மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் இருப்பது போன்ற கடுமையான பாதுகாப்புத் தணிக்கைகள் ஏஐ அமைப்புகளுக்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்று டாரியோ அமோடி வலியுறுத்துகிறார். ஏஐ அமைப்புகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடும் முன், அரசு தரப்பிலான சோதனைகளும், மூன்றாம் தரப்பு சுதந்திரமான தணிக்கைகளும் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏஐ தொழில்நுட்பம் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைச் சில மாதங்களிலேயே தலைகீழாக மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டது என்பதால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடாக அரசாங்கங்களும் விரைவாகச் சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்கி, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றைய அவசியத் தேவையாகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…