பெண் மருத்துவர் சேஜல் பவார், ஆண் சடலங்களின் பிறப்புறுப்பு அளவு குறித்து நகைச்சுவை நிகழ்ச்சியில் கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரணித் மோர் தொகுத்து வழங்கிய பழைய ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவை நிகழ்ச்சியில் பவார் கலந்து கொண்டபோது, தனது மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் ஆய்வகத்தில் ஆண் சடலங்களை ஆய்வு செய்யும்போது அவற்றின் பிறப்புறுப்புகள் அளவு குறித்து தாங்கள் நகைச்சுவையாக கருத்து தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் மீண்டும் பரவியதை அடுத்து, மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. மருத்துவ அறநெறிகளுக்கு (Medical Ethics) முரணாக, சடலங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகப் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகத் தான் மிகவும் வருந்துவதாகக் கூறி மருத்துவர் சேஜல் பவார் ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். தான் மிகவும் தவறான ஒரு விஷயத்தைப் பேசிவிட்டதாக ஒப்புக்கொண்ட அவர், இனி ஒருபோதும் இத்தகைய தவறைச் செய்ய மாட்டேன் என்றும் பொதுமக்களுக்குப் பகிரங்கமாக உறுதியளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…