காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா தெற்கு- ஒரிசா கடலோரப் பகுதியில் உருவாகியுள்ளது. இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகின்ற 19ஆம் தேதி மாலையில் தெற்கு ஒரிசா- வடக்க ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்க கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வடதமிழகம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை இன்று பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆகஸ்ட் 18 ) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும். 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இடையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…
அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…