BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

Spread the love

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகனாகத் தொடங்கி, திரையுலகின் உச்சத்தைத் தொட்டு, இன்று மக்களின் பேராதரவுடன் அரியணை ஏறியுள்ள விஜய்யின் இந்த பயணம், தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

பதவியேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கப் போவதாக உறுதி அளித்தார். குறிப்பாக, தமிழகம் தற்போது ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் இருப்பதாகவும், “கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள்” என்றும் கடந்த அரசை விமர்சித்துப் பேசினார். மாநிலத்தின் நிதிநிலை குறித்த உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்குத் தனது ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய்யின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளுடன் சில அரசியல் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். “அரசிடம் பணம் இல்லை என எடுத்த எடுப்பிலேயே பேச வேண்டாம், மக்களுக்குச் சேவை செய்ய மனமும் ஆட்சித் திறமையும்தான் வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நிதி நெருக்கடி ஆகியவற்றைத் தாண்டித்தான் திமுக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தியது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தேர்தல் சமயத்தில் பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு இப்போது நிதிச் சிக்கலைக் காரணங்காட்டி மக்களை ஏமாற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். “நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டுமே செய்வேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள விஜய், அரசு நிர்வாகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான மோதல்கள் இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், “மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட வீணாகாது” என்றும் “எந்தத் தவறும் நடக்க விடமாட்டேன்” என்றும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். 8 கோடி மக்களையும் சரிசமமாகப் பாவிப்பதாகக் கூறியுள்ள அவரின் தலைமையில் கல்வி, மருத்துவம் மற்றும் சாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழுமா என்பதைத் தமிழக மக்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நடிகராக வென்ற விஜய், ஒரு சிறந்த நிர்வாகியாகவும் முத்திரை பதிப்பாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு… விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவுகளை உருவாக்க அதிரடி…

5 minutes ago

இன்னும் 50 ஆண்டுகளுக்கு விஜய் தான்… இளம் அமைச்சர் கீர்த்தனா அதிரடி..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில், மிக இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, தமிழக அரசியல்…

9 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ முழு விவரம்..!!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் அரசாணையாக வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

16 minutes ago

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

50 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

1 மணத்தியாலம் ago

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

2 மணத்தியாலங்கள் ago