கைது செய்ய வந்தபோது வெறிச்செயல்..! தப்பியோட முயன்று போலீஸ்காரரின் கையை கடித்த நபர் – கேரளாவில் பரபரப்பு…!

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த அவர், மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியில் ஒளிந்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, திரூர் போலீசாரின் உதவியுடன் பாரிப்பள்ளி போலீசார் ஆஷிக்கை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஆஷிக், அவர்களைக் கடுமையாகத் தாக்கினார். ஒருகட்டத்தில் சஜீர் என்ற காவலரின் கையை ஆஷிக் ஆக்ரோஷமாகக் கடித்தார். இதில் காயமடைந்த காவலர் சஜீர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், போலீசார் ஆஷிக்கை விடாமல் போராடி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே உள்ள பாலியல் வழக்குடன், தற்போது போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதற்காகவும், காயம் ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது கூடுதலாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

22 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

50 minutes ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

58 minutes ago

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

1 மணத்தியாலம் ago

கனவாக முடிந்த வாழ்க்கை… அதிகாலையில் சூழ்ந்த கரும்புகை – பெங்களூரு உணவகத்தில் நடந்த கோர விபத்து…!

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…

1 மணத்தியாலம் ago

“இன்று விஜய் முதல்வராக பதவியேற்க காரணமே ஸ்டாலின் தானா?”…. பின்னணியில் நடந்த “மெகா” அரசியல்… வெளியான திடுக்கிடும் உண்மை…!

தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…

1 மணத்தியாலம் ago