கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்பாளையம் பகுதியில் நேற்று போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த ஒருவர் திடீரென சாலையில் கிடந்த கற்களை எடுத்து நடந்து சென்ற பொது மக்கள் மீது வீசினார். அந்த நபரின் செயலால் சின்னசாமி, வேலுமணி, கவிதா, கார்த்திகா ஆகியோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து அந்த நபர் சொக்கம்பாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா(55) என்ற பெண் மீது கற்களை தூக்கி வீசியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போதும் விடாமல் அந்த வாலிபர் சகுந்தலாவின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அன்னுரை சேர்ந்த ரஞ்சித்(18) என்பது தெரியவந்தது கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ரஞ்சித் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். அவரால் காயமடைந்த சின்னசாமி உள்பட 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…