சென்சார் போர்டு முதல் இணையதள கசிவு வரை… விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை குறிவைப்பது ஏன்?… ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ரகசியங்கள்…!!

Spread the love

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்கனவே பல சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், தற்போது முழு படமும் கசிந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயை மிரட்டுவதற்காகவே திட்டமிட்டு இப்படம் கசியவிடப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் படத்தின் வெளியீட்டைத் தடுத்ததில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரே ஜனநாயகன் படத்தை முடக்கக் காரணமாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விஜய்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் நெருக்கடிகளைப் போல தற்போதைய அரசும் செயல்படுவதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Rajeshwari

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago