பட்டியலின பெண் என்பதால் நான் சமைக்கக்கூடாதா..? பள்ளியில் சாதிய பாகுபாடு… மனம் நொந்து பேசிய சத்துணவு பணியாளர்…!!

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றும் நிரோஷா என்ற பட்டியலினப் பெண்ணுக்கு எதிராக சாதி பாகுபாடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.   குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சமைத்த உணவைத் தங்கள் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் என்று கூறி, சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியை, நிரோஷாவை வேலையை விட்டு நிற்குமாறும், இல்லையெனில் பணிநீக்கம் செய்ய நேரிடும் என்றும் மிரட்டியதாக நிரோஷா புகார் அளித்துள்ளார். அவர் விடுப்பில் இருந்தபோது, அவருக்குப் பதிலாக வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. “பட்டியலின பெண் என்பதால் நான் சமைக்கக்கூடாதா?” என்று மனவேதனையுடன் கேள்வி எழுப்பிய நிரோஷா, இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாதி பாகுபாடு காட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Soundarya

Recent Posts

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

4 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

16 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

30 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

39 minutes ago

மகளிர் உரிமைத் தொகையில் ட்விஸ்ட்… தவெக-வின் ரூ.2,500 திட்டத்திற்கு மக்கள் கொடுத்த மாஸ் தீர்ப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…

50 minutes ago

புதிய டுவிஸ்ட்..! விஜய்யின் மாஸ்டர் பிளான்… திருச்சி கிழக்கில் களமிறங்கும் த்ரிஷா..? பனையூர் சந்திப்பால் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…

53 minutes ago