மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மூன்று பெண் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு நீதித்துறை அதிகாரிகளைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (BDO) வைத்து பல மணிநேரம் சிறைபிடிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது நள்ளிரவில் கற்கள் வீசப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், அவர்களைப் பாதுகாக்க மத்திய ஆயுதப் படைகளை அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இந்தச் சம்பவத்தை நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவதற்கான அப்பட்டமான முயற்சி என்றும், நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் வர்ணித்தது. மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், நள்ளிரவு வரை அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். “இது ஒரு பிளவுபட்ட மாநிலம்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகச் சாடினர்.
நீதித்துறை அதிகாரிகளின் மன உறுதியைக் குலைக்கவும், சட்டபூர்வமான தீர்ப்பு வழங்கும் நடைமுறையைத் தடுக்கவும் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இத்தகைய உளவியல் ரீதியான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த முற்றுகை மற்றும் வன்முறை குறித்த விசாரணையை சிபிஐ (CBI) அல்லது என்ஐஏ (NIA) வசம் ஒப்படைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் தேவையற்ற கூட்டங்கள் கூடுவதைக் தவிர்க்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதித்துறை அதிகாரிகளின் இல்லங்களுக்கும் தேவைப்பட்டால் மத்தியப் படைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அதிகாரிகள் விரிவான இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…