“பிரேக் அப் செய்ததால் இப்படியா?.. காதலியின் ஆபீசுக்குள் கத்தியுடன் நுழைந்த காதலன்.. அடுத்து நடந்த ‘அந்த’ விபரீதம்… நெட்டிசன்களை உலுக்கிய பகீர் வீடியோ”..!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் மொஹாலி பெஸ்டெக் மால் அருகே செயல்பட்டு வரும் தனியார் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், பார்ப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த டிம்பிள் (30) என்ற இளம்பெண், அந்த அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து எப்போதும் போல வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது முன்னாள் காதலனும், அதே அலுவலகத்தின் சக ஊழியருமான ஹர்விந்தர் சிங் மான் (34) என்பவர் திடீரென டிம்பிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹர்விந்தர் சிங் டிம்பிளை நோக்கி பாய்ந்துள்ளார். கத்தியைக் கண்டதும் உயிருக்கு பயந்து டிம்பிள் அலுவலகத்திற்குள் இங்கும் அங்கும் ஓடியுள்ளார். ஆனால், அந்த கொடூரன் அவரை ஓட ஓட விரட்டி, கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளான். இதைத் தடுக்க முயன்ற மற்ற ஊழியர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிய ஹர்விந்தர் சிங், டிம்பிளை ரத்த வெள்ளத்தில் சாய்த்துள்ளார்.

பின்னர், அதே கத்தியால் ஹர்விந்தர் சிங் தன்னையும் பலமுறை குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிம்பிள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்த நிலையில், கொலையாளி ஹர்விந்தர் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் முறிவே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

7 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

7 மணத்தியாலங்கள் ago

“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…

7 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago