உலகநாயகன் கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் கமல் 234-ஆவது படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வெளியானது. வீடியோவின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன் காயல்பட்டினத்துக்காரன் என சொல்லுகிறார்.
இந்த படம் நாயகன் படத்தின் அடுத்த பாகம் என்பது தெரிகிறது. பிறக்கும்போதே என் தலையில் எழுதி வச்சுட்டாங்க நான் ஒரு கிரிமினல் யாகுசான்னு.. யாகுசான்னா ஜப்பான் மொழியில் கேங்ஸ்டர் என்று அர்த்தம் என கூறுகிறார். பின்னர் காலம் என்னை தேடி வந்தது இது முதல் முறையல்ல; கடைசி முறையும் இல்ல.. என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயகன் ஞாபகம் வச்சுக்கோங்க என கமல் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசுகிறார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 7, 2023
இந்த படத்திற்கு Thug life என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வீடியோவில் வரும் கமலின் காட்சிகள் ஹாலிவுட் படமான Rise of sky walker படத்தின் காட்சியைப் போலவே இருக்கிறது. கமலின் காட்சிகளும் ஹாலிவுட் படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரி இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் இணையதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.