#image_title
பிரபல நடிகைக்கான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். தமிழில் கொடி, தள்ளி, போகாதே சைரன் 108 உள்ளிட்ட படங்களில் அனுப்பமா நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் அனுபமா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் அனுபமா நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. நேற்று அந்தப் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது.
அப்போது ஜூனியர் என்டிஆர், இயக்குனர் திரி விக்ரம் முன்னிலையில் அனுபமா மேடை ஏறினார். அவர் பேச தொடங்கியதும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு அனுபமாவை பேச விடாமல் செய்தனர் நான் எதுவும் பேச வேண்டாமா என அவர் தெலுங்கில் கேட்டார். அதற்கும் ரசிகர்கள் வேண்டாம் என கூச்சலிட்டனர்.
ஒரு நிமிடமாவது பேசட்டுமா என அனுபமா கெஞ்சி கேட்டார். அப்போதும் ரசிகர்கள் வேண்டாம் என்று கத்தி கூச்சலிட்டனர். இதனால் அனுபமா ஜூனியர் என்டிஆர், திரிவிக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உடனே மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…