தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ரூ.30 லட்சம் வரை கடன் பெற முடியும். இதில் ‘விராசாத்’ எனப்படும் கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தின் கீழ், தொழிலுக்குத் தேவையான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க ஆண்களுக்கு 5% மற்றும் பெண்களுக்கு 4% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், கல்வி கடனாக மாணவர்கள் ரூ.30 லட்சம் வரையிலும், சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.1.50 லட்சம் வரையிலும் நிதியுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் திட்டம்-1ன் கீழ் ரூ.3 லட்சத்திற்குள்ளும், திட்டம்-2ன் கீழ் ரூ.8 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சிறுபான்மையினர் மதச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கடன்தொகை ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் சமண மதத்தினர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தகுதியுள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…