பவானி டூ துபாய்-க்கு அரசு பஸ்ஸா..? ₹150 டிக்கெட்டுக்கு ₹10,000 கட்டணமா..? பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. பின்னணி என்ன..?

Spread the love

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ‘பவானி பைபாஸ் டூ துபாய்’ பேருந்து டிக்கெட் குறித்த செய்தி முற்றிலும் ஒரு தொழில்நுட்பக் குளறுபடியாகும். கோயம்புத்தூர் – பெங்களூரு வழித்தட அரசுப் பேருந்தில், தாமோதரன் என்பவர் பவானி பைபாஸிலிருந்து ஓசூர் செல்வதற்காக ஏறியுள்ளார். பவானியிலிருந்து ஓசூருக்கான உண்மையான கட்டணம் 150 ரூபாய் மட்டுமே. ஆனால், நடத்துநர் வழங்கிய டிக்கெட்டில் இறங்குமிடம் “பவானி பைபாஸ் டு துபாய், UAE” என்றும், அதற்கான கட்டணம் “ரூ. 10,000” என்றும் தவறாக அச்சிடப்பட்டிருந்ததால் பயணி அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது யாரோ திட்டமிட்டு செய்த குறும்போ அல்லது பிராங்கோ அல்ல என்றும், டிக்கெட் அச்சிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட மென்பொருள் பிழை காரணமாகவே இவ்வாறு தவறாக அச்சிடப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இந்தத் தொழில்நுட்பப் பிழையால் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பயணிகளிடம் அவர்கள் பயணித்த தூரத்திற்கான சரியான கட்டணம் ரூ. 150 மட்டுமே வசூலிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இந்த விநோதமான டிக்கெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மீம்களாகவும், கமெண்ட்டுகளாகவும் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. ‘வெற்றி கொடி கட்டு’ திரைப்படத்தில் வரும் ‘துபாய் பஸ் ஸ்டாண்ட்’ நகைச்சுவைக் காட்சியுடன் ஒப்பிட்டும், தமிழக அரசை நக்கல் செய்தும் நெட்டிசன்கள் பலவாறு பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பேருந்தில் துபாய்க்கு டிக்கெட் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் முற்றிலும் தவறான மற்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.

Swetha

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

3 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

3 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago