கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த நாரகம்விளையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சிஜி. கடந்த 2021-ஆம் ஆண்டு பெற்ற தாயையே கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று, தற்போது ஜாமீனில் வெளியே வந்து தந்தையுடன் வசித்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் இவர், சம்பவத்தன்று கையில் ரத்தக்கறையுடன் கூடிய கத்தியுடன் அப்பகுதியில் மிரட்சியூட்டும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார். இதைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிஜியை மடக்கிப் பிடித்து கத்தியைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அருகிலுள்ள வீட்டில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த லீலா என்பது தெரியவந்தது. அவரது உடலில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்ததோடு, அருகிலேயே அவரைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய கல்லும் கிடந்துள்ளது.
உயிரிழந்த லீலா, சிஜியின் நெருங்கிய உறவினர் ஆவார். தாயை இழந்து மனநலம் குன்றிய நிலையில் இருந்த சிஜி மீது பரிதாபப்பட்டு, லீலா அவருக்கு அடிக்கடி உணவு வழங்கி அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார். உணவுக்காகச் சென்ற இடத்தில் சிஜி அவரை கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், சிஜியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் தனு பரத்வாஜ் என்ற பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ…
2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, திமுகவைக் கட்டமைக்கும் நோக்கில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தோல்வியின் பின்னணியை ஆராய அமைக்கப்பட்ட…
சமூக வலைத்தளங்களின் மோகம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக டிக்டாக் போன்ற செயலிகளால் சிறுவர்,…
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி விவகாரங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாவட்டச் செயலாளர்களில் ஒருவர்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்ற எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அமைப்பில்…
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, அங்குள்ள அப்பர் திரிசூலி நீர்மின் திட்டப் பணிகளுக்கான சுரங்கப்பாதைக்குள்…