உதயநிதி போட்ட பிளான்… செக் வைத்த கனிமொழி… மருமகனுக்கே ஷாக் கொடுத்த அத்தை…. அறிவாலயத்தில் வெடித்த உள்கட்சி மோதல்….!

Spread the love

2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, திமுகவைக் கட்டமைக்கும் நோக்கில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. தோல்வியின் பின்னணியை ஆராய அமைக்கப்பட்ட சிறப்பு குழு அளித்த அறிக்கையின்படி, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போலச் செயல்பட்டதே பல தொகுதிகளில் பின்னடைவுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் உட்கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவெடுத்த தலைவர் மு.க. ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளார். சோளிங்கர் பகுதி தவிர்த்து, பிற பெரும்பாலான மாவட்டங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட உள்ளன.

இந்த நிர்வாக மாற்றங்களுக்கு மத்தியில், திமுகவில் இரண்டு முக்கியத் தரப்புகளுக்கு இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தரப்பும் கனிமொழி தரப்பும் புதிய மாவட்டச் செயலாளர் பதவிகளைக் கைப்பற்ற தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றனர். பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்படும் 110 மாவட்டச் செயலாளர் பதவிகளில், குறைந்தது 33 இடங்களை இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், கட்சிக்குள் ஜனநாயக மரபுகளைப் பேண வேண்டும் என்றும், தொண்டர்களின் ஆதரவு பெற்ற தலைவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்றும் கனிமொழி தரப்பு வலியுறுத்தியது. இதற்காக நியமன முறையைத் தவிர்த்து, உட்கட்சித் தேர்தல் வாயிலாகவே மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். வைகோ திமுகவில் இருந்த காலத்திற்குப் பிறகு, கடந்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை மூலமே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்த சூழலில், இம்முறை மீண்டும் உட்கட்சித் தேர்தலை நடத்த கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.

தலைவர் மு.க. ஸ்டாலின் உட்கட்சித் தேர்தல் மூலமாகவே மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததன் மூலம், கனிமொழியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர் அணிக்கு நேரடியாக 33 இடங்களைப் பெற நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டதால், அவர் கடுமையான அப்செட்டில் இருப்பதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த முடிவு திமுகவின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஒரு ஜனநாயக உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“தமிழ்நாட்டின் வரலாறே மாறப்போகுது”…. செங்கோட்டையன் போட்ட வெடி… மௌனம் காக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, அதன் தலைவர் ஜோசப் விஜய்…

22 minutes ago

“2029-ல் டெல்லிக்கு ஸ்கெட்ச்?”…. விஜய் பிரதமர் வேட்பாளரா?…. பிரேமலதா கொடுத்த நறுக்குத் தெறிக்கும் பதில்… அண்ணியார் கூறிய அந்த தலையெழுத்து சீக்ரெட்….!

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி,…

29 minutes ago

“சாராயக் கடை நல்லதா, ஜல்லிக்கட்டு கெட்டதா?”…. விஜய் உடனே மன்னிப்பு கேட்கணும்… சட்டசபையில் வெளுத்து வாங்கிய அதிமுக….!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி…

39 minutes ago

ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு… ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி அபராதம்?… சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு வழக்கு….!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஐ.டி. அணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்…

46 minutes ago

ஐயோ போச்சு..! ஓட்டலில் சாப்பாட போனோம்… ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ்… ஆம்னி பஸ்ஸில் நடந்த பகீர் சம்பவம்…!!

திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் - ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி…

49 minutes ago

“சீட்டும் போச்சு.. பணமும் போச்சு”…. ரூ. 4.50 கோடி சீட் பேரம்…. மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது மோசடி புகார்….. சற்றுமுன் பரபரப்பு…!

தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள்…

58 minutes ago