விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாண்டியன். செட்டியார் வம்ச மக்கள் அதிகளவில் வாழும் இந்த ஊரில்தான் பாண்டியன் பிறந்தார். ஊருக்குள் பெரிய குடும்பங்களில் பாண்டியன் குடும்பமும் ஒன்று. அவரது அப்பாவின் அப்பா, அம்மாவின் அப்பா இருவருக்கும் மதுரையில் சொந்தமாக லாட்ஜ்கள் இருந்தது. அதை கவனிக்க தான் மதுரைக்கு அடிக்கடி பாண்டியன் செல்வார். அங்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், வளையல் கடையும் இருந்தது. அந்த வரவு செலவு கணக்குகளையும் மதுரை செல்லும்போது பாண்டியன் கவனிப்பார்.
அப்படி ஒரு நாள் வளையல் கடையில் பாண்டியன் இருந்த போது, அங்கு வந்த இயக்குநர் பாரதிராஜா, பாண்டியனை பார்த்தவுடன் பிடித்துப்போய் மண்வாசனை படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார். உடனே பாண்டியன் சம்மதிக்க மண்வாசனை படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் படமானது. அடுத்து பாண்டியராஜன் இயக்கத்தில் ஆண்பாவம், நான் பாடும் பாடல், மருதாணி, முதல்வசந்தம், ஊர்காவலன், குரு சிஷ்யன், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் பாண்டியன் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைந்து போனது.
அதன்பின் மதுப்பழக்கத்துக்கு அடிமையான பாண்டியன், அதிகளவில் குடித்தார். அதிமுகவிலும் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிக மதுப்பழக்கத்தால் ஒருகட்டத்தில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் இறந்த தகவல் அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்த பாண்டியனின் அண்ணன், சில மாதங்கள் உடல்நலமின்றி படுக்கையில் உயிரிழந்தார். தம்பி மீது அளவு கடந்த பாசம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். செட்டிக்குறிச்சியில் பாண்டியனுக்கு சொந்தமான பூர்வீக வீடுகள், மதுரை மற்றும் சென்னையில் சொந்த வீடுகள் உள்ளன.
பாண்டியனின் மனைவி லதா, அவரது மகன் ரகு ஆகியோர் மதுரையில் வசிக்கின்றனர். பாண்டியன் சினிமாவில் நடித்து எந்த சொத்தும் வாங்கவில்லை. 1959ல் பிறந்த பாண்டியன், 2008ல் மறைந்தார். சினிமாவில் 1983ல் நடிக்க துவங்கிய பாண்டியன், 2008 வரை, 25 ஆண்டுகள் நடிகராக வாழ்ந்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக, செட்டிக்குறிச்சியில் பாண்டியனின் பெரியம்மா மகள், அதாவது அவரது அக்கா தான் ஊர் தலைவராக இருக்கிறார். அந்தளவுக்கு அந்த ஊரில் பாண்டியன் குடும்பத்தினருக்கு இப்போதும் செல்வாக்கு இருக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…