தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் 2348 கோடி பண மோசடி வழக்கில் சிக்கி தற்பொழுது தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்ய இப்போது ஏமாந்தனர்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அப்படி செய்த விசாரணையில் தற்போது நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவரை விசாரிக்க போலீசார் முயன்றபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த பணமோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷூக்கும் தொடர்புள்ளதாக கூறி அவருக்கு போலீஸார் சம்மன் பிறப்பித்துள்ளனர். அவர் தனது மனைவியுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெறக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பண மோசடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வரும் டிச.10 -ம் தேதி துபாயில் இருந்து சென்னை வரவுள்ளதால் லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருந்தார். இந்நிலையில் ‘அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைத்து’ நீதீமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…