டெல்லி நீதிமன்ற இளம் நீதிபதி அமன் குமார் ஷர்மாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்த அவர், “அப்பா இதுதான் கடைசி கால், எனக்கு வாழப் பிடிக்கவில்லை” என்று மிகுந்த மன உளைச்சலுடன் அழுதுள்ளார். பதறியடித்துக்கொண்டு தந்தை ராஜஸ்தானிலிருந்து டெல்லிக்கு விரைந்தும், மறுநாள் காலை தனது வீட்டின் குளியலறையில் நீதிபதி அமன் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திறமையான நீதிபதியாக அறியப்பட்ட ஒருவரின் வாழ்வு 30 வயதிலேயே இப்படி முடிவுக்கு வந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மரணத்திற்கு அமன் குமாரின் மனைவியும், அவரது சகோதரியும்தான் காரணம் என நீதிபதியின் உறவினர்கள் பகீர் புகாரை முன்வைத்துள்ளனர். மனைவியின் சகோதரி வீட்டின் அதிகாரத்தைத் தன் வசம் வைத்துக்கொண்டு, கடந்த இரண்டு மாதங்களாக அமன் குமாரைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மகனைக் காப்பாற்ற வந்த தந்தையையே, “இங்கிருந்து கிளம்பாவிட்டால் போலீஸை அழைப்பேன்” என மருமகள் மிரட்டியதாகவும், சம்பந்திகளின் எண்களைத் தொடர்பு கொள்ள முடியாதபடி பிளாக் செய்து வைத்திருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2018-ல் சட்டப்படிப்பை முடித்து, 2021-ல் டெல்லி நீதித்துறை சேவையில் இணைந்த அமன் குமார் ஷர்மா, இறுதியாக கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சட்டத்தின் மூலம் பலருக்கு நீதி வழங்க வேண்டிய ஒரு நீதிபதியே, குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார், அவரது மரணத்திற்குப் பின்னணியில் உள்ள உண்மைக் காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…