அகமதாபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 11 மாதங்களாக விற்பனையாளராகப் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்பவர், தன் முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில், உரிமையாளர் தனக்கு அவசர வேலை நிமித்தமாக விடுப்பு அளித்துள்ளதாக சக ஊழியர்களிடம் பொய் கூறிவிட்டு அவர் கடையிலிருந்து வெளியேறியுள்ளார். அன்று மாலை வழக்கமான கணக்கெடுப்பின் போது ஒரு தங்க பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கவனித்த ஊழியர்கள், உரிமையாளர் தர்ஷன்பாயிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் ஹர்ஷிதா யாரிடமும் சொல்லாமல் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை முழுமையாகச் சோதனை செய்தபோது, சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் எனப் பெருமளவிலான ஆபரணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹர்ஷிதா நைசாக நகைகளைத் தனது சீருடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இந்தத் துணிகரத் திருட்டு குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ஹர்ஷிதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருட்டுச் சம்பவம் அரங்கேறியது முதல் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்த ஊழியரே இவ்வளவு பெரிய தொகையிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அந்தப் பகுதியில் உள்ள இதர வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…