கருங்காலி மாலை தான் பிரச்சனையா ? தனுஷ், சிவகார்த்திகேயனை தொடர்ந்து இப்போது சர்ச்சையில் லோகேஷ்.. பிரபலம் பளிச்..

By Deepika

Updated on:

தற்போது இளைஞர்கள் அனைவரும் கருங்காலி மாலையை அணிய தொடங்கி விட்டார்கள், அதற்கு காரணம் பிரபலங்கள் தான். தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் இந்த மாலையை அணிந்து தான் இப்போது இது ட்ரெண்டாக காரணமே.

lokesh karungali malai

இந்த கருங்காலி மாலை என்பது கருங்காலி மரத்தில் இருந்து செய்வது ஆகும். முழுக்க முழுக்க கருப்பாக இருக்கும் இந்த மாலை உட்புறமும் கருப்பாக இருக்கும். இந்த மாலையின் உட்புறமும் கருப்பாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு ஆகும். இதை மணி போல வெட்டி அதை மாலையாக கோர்த்து பயன்படுத்துவது இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

   

இது அணிந்தால் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். நெகட்டிவ் எனர்ஜி கிடைக்காது. மனது நன்றாக இருக்கும். நல்ல முடிவுகளை எடுக்க முடியும். சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று பல்வேறு விஷயங்கள், காரணங்கள் இதை அணிவதற்கு சொல்லப்படுகிறது.

Dhanush karugali maalai

ஆனால் இந்த மாலை அணிந்ததால் தான் இந்த பிரபலங்கள் சர்சையில் சிக்குகிறார்களா என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அவர் கூறியுள்ளதாவது, தனுஷ் இந்த மாலை அணிந்தபின் தான் அவரது படங்கள் ஹிட் ஆக தொடங்கின. ஆனால் அவரது மனைவியை பிரிந்தார். அதன்பின் இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அடுத்தது சிவகார்த்திகேயன், உங்களுக்கே தெரியும் சிவகார்த்திகேயன் எப்பேர்ப்பட்ட வெற்றிகரமான நடிகர் என்று ஆனால் அவர் மேல் மிகப்பெரிய பழி ஒன்று விழுந்தது, படங்களும் சரியாக போகவில்லை.

Sivakarthikeyan karungali malai

இப்போது லோகேஷ், லியோ வசூல், இப்போது ஸ்ருதியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் சர்ச்சையில் சிக்கி டவுனாகவே இருக்கிறார். இது எல்லாம் இந்த மாலையா தான் என பலர் கூறுகின்றனர். ஆனால் இது மூட நம்பிக்கை, அந்த மாலை எப்படி இவர்களுக்கு துன்பத்தை தர முடியும் ? எம்.ஆர்.ராதா, விவேக் போன்ற நடிகர்கள் இப்போது இருந்திருந்தால் தங்கள் படங்கள் மூலம் இதற்கு சரியான விழிப்புணர்வை கொடுத்திருப்பார்கள் என கூறியுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

author avatar
Deepika