கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா குடும்பத்தினரிடையே கடந்த பல ஆண்டுகளாக 10 ஏக்கர் நிலம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தைக்காக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது.
இந்த மோதலின் போது, அப்பு கவுடா மற்றும் அவரது தரப்பினர் தாங்கள் திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரேவணசித்தப்பா குடும்பத்தினரை கொடூரமாக தாக்கினர். இந்த பயங்கர தாக்குதலில் துண்டப்பா, சிவபுத்ரா, சந்திரகாந்த், ராகுல், சமர்த் மற்றும் தோட்ட வேலைக்காரர் சபீர் பாபுசாப் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், அரவிந்த் யஷ்வந்த் மற்றும் சந்தீப் பாரத் மானே ஆகிய இருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், வெட்டுக்காயங்களுடனும் படுகாயமடைந்தனர்.
இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அப்பு கவுடாவும் அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சடச்சனா போலீஸார், தலைமறைவாக உள்ள சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். படுகாயமடைந்த இருவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…