“இனிமே என் பொண்டாட்டிக்கு போன் பண்ணாத!”… எச்சரித்தும் கேட்காத கள்ளக்காதலன்.. நள்ளிரவில் கணவன் போட்ட ஸ்கெட்ச்… பல்லடத்தை உலுக்கிய சம்பவம்…!!!

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தர்மா என்பவரது மனைவி ராஜேஸ்வரிக்கும், கோபிநாத் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் தனது மனைவியின் செல்போனைப் பயன்படுத்திய விக்னேஷ், அதில் கோபிநாத்திடமிருந்து வந்த தொடர் அழைப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோபிநாத்தை எச்சரித்த போதிலும், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தர்மா, கடந்த 6-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோபிநாத்தை மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதிக்குத் தனியாக வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த கோபிநாத்திடம், தனது மனைவியுடன் இருக்கும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுமாறு விக்னேஷ் எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் தாங்காத விக்னேஷ், அருகில் கிடந்த கயிற்றை எடுத்து கோபிநாத்தின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதற்கிடையில், காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோபிநாத்தின் மனைவி சத்யபாமா திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கோபிநாத்தைத் தேடி வந்த நிலையில், கொலையாளி விக்னேஷ் தர்மா மதுரையில் உள்ள வழக்கறிஞர் மூலம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் திடீரென சரணடைந்தார். தான் கோபிநாத்தைக் கொலை செய்து சடலத்தைப் பல்லடம் அருகே மறைத்து வைத்திருப்பதாக அவர் போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.

விக்னேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில், பல்லடம், பொங்கலூர் மற்றும் அவிநாசிபாளையம் போலீசார் மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு விரைந்து சென்று கோபிநாத்தின் அழுகிய உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரைத் திட்டமிட்டு வரவழைத்துக் கொலை செய்துவிட்டு, மதுரையில் சரணடைந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

16 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

24 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

41 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

49 minutes ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

56 minutes ago