மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான அரசியல் இணைப்பு விழாவில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பையும், கடந்த ஐந்து ஆண்டுகால சிறப்பான ஆட்சியையும் பாராட்டியுள்ள ஓபிஎஸ், அவரது வழிகாட்டுதலின் கீழ் மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்த விழாவிற்கான பந்தல்கால் நடும் விழா திருமங்கலத்தில் நடைபெற்ற நிலையில், வரும் மார்ச் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இணைப்பு விழா அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மதுரை மாவட்டத்தில், குறிப்பாக ஆர்.பி. உதயகுமாரின் செல்வாக்கு மிக்க திருமங்கலம் பகுதியில் இந்த விழா நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளதாக ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது லட்சக்கணக்கான தொண்டர்களும் அக்கட்சியில் இணைய உள்ளது தென் தமிழக அரசியலில் திமுகவின் கரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…