விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட முடியாத விரக்தியில் இருந்த ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் ஒருவருக்கு, 35,000 அடி உயரத்தில் நடுவானில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே பாப்பாவின் அருள் கிடைத்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனுராதா சோனி என்ற பணிப்பெண், கடைசி நேரத்தில் பணி நேரம் மாற்றப்பட்டதால் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்துகொள்ள முடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் பயணித்த அதே விமானத்தில் பயணி ஒருவர் சிறிய விநாயகர் சிலை ஒன்றை எடுத்து வந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DdRFZjINLiF/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
இதைக் கண்டதும் அதிர்ச்சியும் ஆனந்தம் அடைந்த அனுராதா சோனி, 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே விநாயகர் சிலையை கைகூப்பி மனமுருகிப் பிரார்த்தனை செய்து பாப்பாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றார். “நான் எங்கு சென்றாலும் என் கணபதி என்னோடுதான் இருப்பார் என்பதை உணர்ந்த தருணம் இது” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட வீடியோ, இன்ஸ்டாகிராமில் 65 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…