Categories: சினிமா

‘அன்பே வா’ சீரியலை விட்டு விலகும் முக்கிய நடிகை… ரசிகர்களுக்கு வைத்த அன்பான கோரிக்கை… என்ன தெரியுமா…?

Spread the love

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் தொடர் ‘அன்பே வா’ . இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். அவருக்கு ஜோடியாக விராட் நாயகனாக நடிக்கிறார். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி அவர் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். நடிகை டெல்னா டேவிஸ் இதற்கு முன் வித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் அவர் ஆக்கம், 49 ஓ என்ற படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை டெல்னா டேவிஸ் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார்.

இந்தநிலையில், அன்பே வா தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கும் டெல்னா டேவிஸ் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.  ‘அன்பே வா’ சீரியல்  1000 எபிஸோடுகளை நெருங்கி கொண்டு இருக்கிறது. 2020 ல் தொடங்கப்பட்ட இந்தத் சீரியல் மூன்று ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது. தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்புள்ள அன்பே வா குடும்பமே, அன்பே வா தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன்.

  

அழகான நினைவுகளால் இங்கு எனக்கு மறக்க முடியாத பயணம் கிடைத்தது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் வாய்ந்தது அன்பே வா தொடர். அனைவருக்கும் நன்றி. இந்தத் தொடரில் நானும் ஒரு அங்கமாக இருந்ததைப் பெருமையாக நினைக்கிறேன். தொடர்ந்து உங்களது ஆதரவை `அன்பே வா’ தொடருக்கு கொடுங்கள்’ என ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைத்துள்ளார்.

Begam

Recent Posts

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

1 minute ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

6 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

9 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

9 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

10 minutes ago

“ஜெயிச்ச 1 மாசத்துல ராஜினாமாவா?”…. தவெக-வை துவம்சம் செய்த கிருஷ்ணசாமி.. இடைத்தேர்தலுக்கு செக்.. தேர்தல் கமிஷனுக்கு பறந்த கடிதம்….!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…

14 minutes ago