“கூகுளில் மாத்திரை பார்த்து கருவை கலைச்சிடு” இல்லனா… ஹோட்டல் ரூமில் வைத்து தாலி கட்டிய காதலன்… வயிற்றில் பிள்ளையோடு கதறி அழுத காதலி….!

Spread the love

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று உள்ளார். அங்கு தன்னுடன் உடற்பயிற்சி செய்யும் கிஷோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு ஹோட்டல் அறையில் வைத்து அர்ச்சனாவுக்கு கிஷோர் தாலி கட்டி திருமணம் செய்து உள்ளார். மேலும் அர்ச்சனாவை ஏமாற்றி கிஷோர் பலமுறை உடல் ரீதியாகவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் பல இடங்களுக்குச் சென்று நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனால் அர்ச்சனா கர்ப்பமான நிலையில் கருவை கலைக்க சொல்லி கிஷோர் மற்றும் அவருடைய அக்கா யாழினி இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் அர்ச்சனா கிஷோரின் வீட்டுக்கு நேரடியாக சென்று வாக்குவாதம் செய்துள்ளார். தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு கிஷோர் தான் தந்தை என்று கண்டிப்பாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு கிஷோரின் அக்கா, கூகுளில் ஏதாவது மாத்திரை பார்த்து நீயாக கருவை கலைத்துவிடு இல்லை என்றால் நாங்கள் அந்த குழந்தையை பிறக்க விடாமல் செய்து விடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்த நிலையில் தன்னை ஏமாற்றிய கிஷோர் மீதும் கருவை கலைக்க சொல்லி மிரட்டிய அவருடைய அக்கா மீதும் அர்ச்சனா போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலைக்கழிப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அர்ச்சனா கிஷோர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கிஷோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டது உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

3 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

3 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

3 மணத்தியாலங்கள் ago