சுதந்திரமா இருக்கணும்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க?… உங்களுக்கெல்லாம் எதுக்கு குழந்தைங்க?… உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

Spread the love

சிங்கப்பூரில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மனைவி இரு குழந்தைகளுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே இளைய மகனின் பிறந்த நாள் வருகின்ற 23ஆம் தேதி வருவதால் மகனின் அப்பா இந்தியா வந்துள்ளார். தன்னுடன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று குழந்தைகளை ஒப்படைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் என்ற நீதிபதிகளிடம் விசாரணைக்கு வந்துள்ளது.

காணொளி காட்சி மூலம் அப்பெண் கோட்டில் ஆஜரானார். விசாரணை ஆரம்பித்தது கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். எனக்கு கணவனுடன் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க விருப்பமில்லை என்றும் எனக்கு ஜீவனாம்சம் கூட அளிக்கவில்லை என்று கூறினார். நீதிபதி, நீங்கள் உங்கள் கணவனோடு வாழ்வதற்கு என்ன பிரச்சனை? என்று கேட்டார். அப்பெண்:என் கணவனின் செயல்பாடுகள் சரியில்லை, சிங்கப்பூரில் வாழ்வதற்கு மிகவும் கடினம் வாழ வேண்டும் என்றால் வேலை தேவை என்று கூறினார். நீதிபதிகள்: வேலை இருக்கிறதோ இல்லையோ வேலைக்கு செல்கிறாரோ இல்லையோ ஆனால் நீங்கள் அவருடன் சென்றால் அவர் உங்களுக்கு தேவையானதையும் உங்களின் குழந்தைகளுக்கு தேவையானதையும் மற்றும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவனிடம் கேட்கலாம் என்று கூறினர்.

ஆனால் அப்பெண்ணோ நான் யாரையும் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள் அப்பெண்ணிற்கு அறிவுரை கூறினர், எங்களை பழைய புராணம் பாடுகிறார்கள் என்று நினைத்தாலும் கூட பரவாயில்லை ஆனால் திருமண உறவு நீடிக்கும் வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவருமே ஒருவரை சார்ந்து ஒருவர் இருந்து தான் ஆக வேண்டும் யாராவது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் எதற்கு அவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுரை சொன்னார்.

திருமணம் என்பது இருவரும் ஒருவராக மாறி செயல்படுவது , பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். குழந்தைகளுக்காகவாது சிந்தித்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. குழந்தைகள் அழகான குடும்பத்தையே பார்க்க வேண்டும். உடைந்த குடும்பத்தை அல்ல அவர்கள் என்ன செய்தார்கள் ஏன் அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு அந்தப் பெண் சிந்திப்பதாக தெரிவித்தார்.

Divyamayakannan

Recent Posts

தமிழக அரசியலில் ‘திக் திக்’ கிளைமாக்ஸ்..! விஜய்க்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர்..? தடையை உடைக்கப்போகும் அந்த 5 பேர்… ஆட்சியமைக்க இதுதான் வழி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

3 minutes ago

“பள்ளியா? அல்லது பண்ணை வீடா?… அரசு பள்ளி மாணவர்களைத் துப்புரவு பணியாளர்களாக மாற்றிய ஆசிரியர்கள்… வைரலாகும் நேனுவா பள்ளி வீடியோ”…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள நேனுவா காம்போசிட் பள்ளியில் (Nenua Composite School), பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைப்…

4 minutes ago

விஜய்க்கு ஏன் இன்னும் அழைப்பு விடுக்கப்படல…? இதுதான் காரணம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது… தவெகவுக்கு செக் வைத்த ஆளுநர்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,  இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இருப்பினும்,…

9 minutes ago

“அறையை காலி பண்ணுங்க” அதிமுக MLA-க்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் நிர்வாகம்.. வேறு விடுதிக்கு மாற்றம்… பின்னணி என்ன..?

புதுச்சேரியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியிலிருந்து தற்போது வேறொரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பழைய…

13 minutes ago

“கைதிக்கும் காதல் வரும்” சிறையில் மலர்ந்த ‘சினிமா’ பாணி காதல்.. விடுதலையான கைதியை கரம்பிடித்த சிறை அதிகாரி..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் வாரண்ட் இன்சார்ஜ் ஆகப் பணியாற்றி வந்தவர் பிரோசா காட்டூன். இவர் தனது…

13 minutes ago

“மருத்துவக் கல்லூரியா? சித்திரவதைக்கூடமா?… ஜூனியர் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்… பல மணி நேரம் நிற்க வைத்து டார்ச்சர் செய்த சீனியர்கள்… இணையத்தளத்தில் வைரலாகும் ராகிங் வீடியோ”…!!!

பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியில் (MLNMC) அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் ராகிங் சம்பவம், மருத்துவக் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புக்…

14 minutes ago