உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள நேனுவா காம்போசிட் பள்ளியில் (Nenua Composite School), பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைப் பெருக்கி சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்க வேண்டிய வயதில், மாணவர்களைக் கொண்டு துப்புரவுப் பணிகளைச் செய்ய வைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், பல அரசுப் பள்ளிகளில் இது போன்ற அவலங்கள் தொடர்வதாகப் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவறைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது உண்மையானப் பிரச்சினையை மூடிமறைக்கும் செயல் என்றும், இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தின் மீது கல்வித் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…