கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்களான சீதாராம் மற்றும் அருண்குமார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் தங்கள் அறையில் மது அருந்தியவாறு கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளனர். அப்போது, சீதாராம் அதிகமாக இறைச்சித் துண்டுகளை சாப்பிட்டதாகக் கூறி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் முற்றிய இந்த வாக்குவாதத்தின் முடிவில், ஆத்திரமடைந்த அருண்குமார் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நண்பரைக் கொன்ற குற்றத்தை மறைக்க எண்ணிய அருண்குமார், உடனடியாக உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வெல்டிங் செய்யும் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்துவிட்டதாகப் பொய் கூறியுள்ளார். எனினும், நெஞ்சில் இருந்த ஆழமான கத்திக்குத்து காயத்தைக் கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த கடாபிரபா போலீசார் அருண்குமாரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…