Categories: சினிமா

ஒரு லட்சம் ரூபாய் வாங்கிட்டு பல வருஷமா இழுத்தடிக்கும் விஜய்.. பல வருட உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம் தான் விஜயின் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் எனவும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய் புதிதாக தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தில் இறங்கியுள்ள நிலையில் சமீபத்தில் மிகப்பெரிய மாநில மாநாட்டையும் நடத்தி முடித்தார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுகிறார். சமீபத்தில் நடந்த மாநில மாநாட்டில் விஜய் பேசியது தமிழகத்தில் பல அரசியல்வாதிகளையும் மிரள வைத்தது.

குறிப்பாக வெற்றி வெற்றி என்ற கொள்கை பாடலும் செம மாஸ் ஆக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் தான் பட்ட அவமானங்களையும் அதன் பிறகு உழைத்து முன்னேறிய கதையையும் உணர்ச்சி பொங்க விஜய் மேடையில் பேசினார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் குறித்த பல செய்திகள் இணையத்தில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பைரவி திரைப்படத்தை இயக்கியவர் தான் எம் பாஸ்கர்.

இவருடைய மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு விஜய் குறித்தும் அவருடன் இணைந்து தயாரித்த விஷ்ணு திரைப்படம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், விஜய் சாரையும் ரெண்டு மூணு தடவை பார்த்தோம். ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். அப்போ எஸ்.ஏ.சி சார், சோபா அம்மா மற்றும் விஜய் 3 பேரும் பணத்தை வாங்கினார்கள். அப்போ சோபா அம்மா, அண்ணே நீங்கதான் விஜய் தம்பிக்கு வாழ்க்கை கொடுத்தீங்க, நாங்களே சொந்த படம் எடுத்துக்கிட்டு இருந்த காலகட்டத்தில் வெளி தயாரிப்பாளர் யாராவது வர மாட்டாங்களான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.

நீங்க வந்து விஷ்ணு என்ற ஹிட் படத்தை கொடுத்தீங்க. அந்த நன்றியை நாங்க எப்பவும் மறக்க மாட்டோம். கண்டிப்பா உங்களுக்கு அடுத்த படம் பண்ணி தரும் என்று சொன்னாங்க. அந்த பணத்தை கொடுத்ததற்கு அப்புறம் அடுத்தடுத்து காலங்கள் தான் ஓடுதே தவிர விஜய் சாரோட டேட் எங்களுக்கு கிடைக்கல என்று பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். 1995 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பாலாஜி பிரபு தயாரித்திருந்த திரைப்படம் தான் விஷ்ணு. இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்த நிலையில் விஜய்யுடன் சங்கவி, ஜெய்சங்கர், எஸ் எஸ் சந்திரன் மற்றும் செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

3 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

3 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago