தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தான் தீப்பெட்டி கணேசன். இவர் தமிழில் அங்காடி தெரு, ரேணிகுண்டா, நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகராக இருந்தார். தமிழில் படங்கள் சிலவற்றில் நடித்திருந்த போதும் தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வறுமை நிலையில் இருந்த அவருடைய வாழ்க்கை கொரோனா பொதுமொடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மிகவும் மோசம் அடைந்தது. இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் தீப்பெட்டி கணேசன் ஈடுபட்டு வந்தார்.
இதனைத் தவிர சிறு சிறு தொழில்களிலும் கவனம் செலுத்தினார். இவருடைய நிலையை அறிந்து திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன், நடிகர் விஷால் மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பலரும் அவருக்கு உதவி செய்தனர். நடிகர் விஷால் சார்பில் அவரது குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் கூட அப்போது அனுப்பி வைக்கப்பட்டது. தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரை சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டும் தான் என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூட தீப்பெட்டி கணேசன் பகிர்ந்து இருந்தார்.
தன் மீது அவ்வளவு பாசம் கொண்ட அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை. இதனை தொடர்ந்து தீப்பெட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி இருந்தார். இப்படியான நிலையில் வறுமை வாட்டி வதைக்க நெஞ்சுவலி ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனாதையாக இறந்து கிடந்தால் தீப்பெட்டி கணேசன். இவருடைய மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…