#image_title
பிரேம்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இயக்குனர் ஆவதற்கு முன்பு பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக தனது கேரியரை ஆரம்பித்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் பிரேம்குமார்.
2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி திரிஷா ஆகியோரை வைத்து 96 என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரேம்குமார். அதற்கு அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானு படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
தற்போது கார்த்தி அரவிந்தசாமி ஆகியோரை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரேம்குமார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த மாதிரி படங்கள் தான் இனி தேவை என்று மக்கள் மெய்யழகன் படத்திற்கு விமர்சனம் கூறியிருக்கிறார்கள்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரேம்குமார் தனது முதல் படமான 96 படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் நடிகை திரிஷா அணிந்திருந்த Yellow Salwar எப்படி செலக்ட் பண்ணினோம் என்பதை பற்றி பயின்றிருக்கிறார். அந்த படம் வெளியான நேரத்தில் திரிஷாவின் அந்த மஞ்ச கலர் சல்வார் மிகவும் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரேம்குமார் த்ரிஷாவின் காஸ்டியூம் செலக்சன் பற்றி பேசும்போது முதலில் நாங்கள் திரிஷாவுக்கு நினைத்து வைத்திருந்த கலர் மயிலுக்கு வரும் கலரை தான் நாங்கள் நான் நினைத்து வைத்திருந்தேன். ஏனென்றால் படம் முழுவதும் லைட் கலர்ஸ் தான் வரும். அப்போ ஒரு போல்ட் கலர் வேணும் என்று அதைத்தான் நினைத்திருந்தேன். அதற்குப் பிறகு காஸ்ட்யூம் டிசைனர் தான் இந்த எல்லோ கலரை கொண்டு காட்டும் போது எனக்கு மனசுக்கு பார்த்த உடனே பிடித்து விட்டது. ஏனென்றால் மிகவும் சிம்பிளாவும் இருந்தது எலிகண்டாகவும் இருந்தது. ஏனென்றால் ஜானு கொண்டாட்டத்திற்காக வரவில்லை ராமை ஒரு முறை பார்த்தால் போதும் என்று நினைப்பில் தான் வந்திருப்பாள். அதனால் சிம்பிளாகவும் எளிதாகவும் அந்த மஞ்சள் கலர் சல்வார் இருந்தது மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தான் அந்த காஸ்டியூமே செலக்ட் செய்தோம் என்று பிரேம்குமார் மனம்திறந்து பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…