கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகலைச் சேர்ந்த 28 வயதான அவினாஷ் என்பவருக்கும், அவரது காதலிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. புதுத்தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், மனைவியின் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவிற்காக அவர் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். திருவிழா முடிந்த பிறகும் மனைவி நீண்ட நாட்களாகத் தனது தாய்வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
மனைவியைப் பிரிந்திருந்த அவினாஷ், அவரை மீண்டும் தனது வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார். ஆனால், மனைவி வருவதற்குத் தயக்கம் காட்டியதுடன் செல்போனில் பேசியபோதும் சரியாகப் பதில் அளிக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவினாஷ், மனைவியை உடனடியாக வீட்டிற்கு வந்து குடும்பத்தைத் தொடருமாறு பலமுறை வலியுறுத்தியும் பலன் கிடைக்கவில்லை.
காதலித்துத் திருமணம் செய்த மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து வர மறுத்ததாலும், முறையான பதில் அளிக்காததாலும் அவினாஷ் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த புதுமாப்பிள்ளை அவினாஷ், தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து குனிகல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று…
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…