“அமெரிக்க துணை அதிபர் விமானத்தை வளைத்த 5 போர் விமானங்கள்… பாகிஸ்தான் வான் எல்லையில் நடந்தது என்ன?…. பதற வைக்கும் வீடியோ”…!!

Spread the love

வளைகுடாவில் கடந்த ஒரு மாதமாக நீடித்த அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், தற்போது 15 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நிரந்தர அமைதியை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால் உலக நாடுகளின் கவனம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தபோது, அவர்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் விமானப்படையின் ஐந்து எஃப்-16 (F-16) போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்து அழைத்து வந்தன. இந்தத் தூதுக்குழுவில் டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். ஈரான் தரப்பில் அந்நாட்டுச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டுவதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. ஈரான் தனது யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்க, போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற 10 நிபந்தனைகளை ஈரான் வலியுறுத்துகிறது. அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மையை ஈரான் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள போதிலும், அடுத்த வாரம் நடைபெற உள்ள இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தைக்கு இந்த இஸ்லாமாபாத் சந்திப்பு ஒரு முக்கிய முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago