கிடுக்கிப்பிடி போட்ட போலீஸ்… விஜய்யின் கன்னியாகுமரி கூட்டத்திற்கு விழுந்த கடும் நிபந்தனைகள்… 6 மணி நேரம் மட்டுமே அனுமதி… தவெக-வின் புதிய வியூகம்..!!!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விஜய், ஏப்ரல் 12-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க உள்ளார்.

இதற்காக நாகர்கோவில் அருகே உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் தவெக-விற்குப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளைக் கருத்தில் கொண்டு, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இந்தக் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கன்னியாகுமரி விரைந்துள்ளனர். விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் நேரடியாக மேற்பார்வையிட உள்ளனர். தென் தமிழகத்தின் முக்கியப் பகுதியான கன்னியாகுமரியில் விஜய்யின் இந்தப் பரப்புரை, தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

Rajeshwari

Recent Posts

“சரணடையச் சொன்னால் போர் தான்”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் அதிபரின் மாஸ் எச்சரிக்கை… கசிந்த ரகசியத் தகவல்…!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…

3 minutes ago

கூகுள் மேப்பிற்கே சவால்..! விவசாயி அசந்து தூங்க.. வழிகாட்ட ஆள் இல்லாமலேயே மாடுகள் வண்டியை இழுத்துச் செல்லும் அதிசயம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…

5 minutes ago

“திமுக தோற்க வேண்டும் என்பதே ராகுலின் திட்டம்”… உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…

7 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

13 minutes ago