Categories: CINEMA

‘லியோ’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு… செமையா இருக்கே… இதைஏன்ப்பா டெலீட் பண்ணீங்க… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர்  19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்தது. ஆனாலும் அனைத்து பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரிலீசான முதல் நாளே  உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்து புது உச்சத்தை எட்டியது. இதைத்தொடர்ந்து 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தற்பொழுது  வரை திரையரங்குகள் கூட்டமாக தான் இருக்கின்றன.

வசூலில் சக்க போடு போட்டு வரும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று ரசித்து வருகின்றனர். லியோ திரைப்படத்திலிருந்து 13 காட்சிகளுக்கும் மேல் நீக்கப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லியோ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மன்சூர் அலி கான் ‘எல்லாருக்கும் ஒவ்வொரு பர்ஸ்பெக்டிவ் இருக்கும். இது என்னோட பர்ஸ்பெக்டிவ்’ என கூறுகிறார்.

தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து  நவம்பர் 1ம் தேதியான இன்று  லியோ படத்தின் வெற்றி விழா ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் 6000 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

கல்கி படத்திற்கும் பகத் பாஸுலுக்கும் கனெக்ஷன் இருக்கா..? இது என்ன புது கதையா இருக்கு..!!

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த…

34 நிமிடங்கள் ago

வெள்ளி விழா படங்களை கொடுத்தும்.. நடிகர் சிவகுமார் கடைசிவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணி நேரம் ago

என்னது இது ஆதி காலத்து பேரா இருக்கு.. இதெல்லாம் செட் ஆகாது.. பிரபல நடிகையின் பெயரை மாற்றிய எம்.ஆர்.ராதா..!!

நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி…

1 மணி நேரம் ago

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்.. அங்கு நடந்த சம்பவத்தை மெய்மறந்து பார்க்க நடிகை பிரியா ஆனந்த்.. வைரல் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை…

2 மணி நேரங்கள் ago

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…

2 மணி நேரங்கள் ago

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…

3 மணி நேரங்கள் ago