Categories: சினிமா

என்னது இது ஆதி காலத்து பேரா இருக்கு.. இதெல்லாம் செட் ஆகாது.. பிரபல நடிகையின் பெயரை மாற்றிய எம்.ஆர்.ராதா..!!

Spread the love

நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கே.ஆர் விஜயா நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு இணையாக நடிப்பில் பட்டயை கிளப்பியவர் கே.ஆர் விஜயா.

இவரது உண்மையான பெயர் தெய்வ நாயகி. 1960-களில் ஆரம்பித்து சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் கே.ஆர்.விஜயா. கடந்த 1963-ஆம் ஆண்டு கே.ஆர் விஜயா நடித்த கற்பகம் படம் ரிலீஸ் ஆனது. முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், எஸ்.எஸ் ராஜேந்திரன், உள்ளிட்டாருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கே.ஆர் விஜயா அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு முறை ஒரு படத்தின் மேக்கப் ஆடிஷன் நடைபெறும் போது கே.ஆர் விஜயா அங்கு சென்றுள்ளார். அப்போது எம்.ஆர் ராதா கே ஆர் விஜயாவிடம் உன் பெயர் என்ன என கேட்டுள்ளார். என் பெயர் தெய்வநாயகி என கே.ஆர் விஜயா கூறியுள்ளார். அதனை கேட்டதும் எம்.ஆர் ராதா அது என்ன தெய்வநாயகி, தையல்நாயகி அப்படின்னு.

இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி உன் பேர விஜயா அப்படின்னு வச்சுக்கோ என கூறியுள்ளார். அவர் கூறியதிலிருந்து அப்பா அம்மா இனிஷியல் சேர்த்து தெய்வநாயகி என்ற பெயரை மாற்றி கே.ஆர் விஜயா என வைத்துக்கொண்டார். அதிலிருந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து சினிமாவின் உச்சத்திற்கு சென்றார். இன்றிலிருந்து இன்று வரை எம் ஆர் ராதா வைத்த கே ஆர் விஜயா என்ற பெயர்தான் நிலைத்து நிற்கிறது.

admin

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

9 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

9 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

10 மணத்தியாலங்கள் ago