#image_title
நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை மெய்மறந்து பார்த்தார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது .தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா ஆனந்த்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான லீடர் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. தற்போது அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இப்படத்தை இயக்கியிருக்கின்றார் .
மேலும் இந்த திரைப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கேஸ் ரவிக்குமார். பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மீண்டும் நாட்களாக ரிலீசாகாமல் இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மேலும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் திருச்செந்தூரில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு சென்றிருக்கின்றார். அங்கு சாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த இவர் படுகர் இன மக்கள் நடனமாடியதை மகிழ்ச்சியாக பார்த்து வந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…