என்னது இது ஆதி காலத்து பேரா இருக்கு.. இதெல்லாம் செட் ஆகாது.. பிரபல நடிகையின் பெயரை மாற்றிய எம்.ஆர்.ராதா..!!

By admin on ஆனி 29, 2024

Spread the love

நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கே.ஆர் விஜயா நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு இணையாக நடிப்பில் பட்டயை கிளப்பியவர் கே.ஆர் விஜயா.

பிளாஷ்பாக் : பெரியாரை அப்போ பிடிக்காது.. என் மனம் கவர்ந்த தலைவர் "அவர்" தான் - ஓப்பனாக பேசிய நடிகவேள் M.R ராதா

   

இவரது உண்மையான பெயர் தெய்வ நாயகி. 1960-களில் ஆரம்பித்து சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் கே.ஆர்.விஜயா. கடந்த 1963-ஆம் ஆண்டு கே.ஆர் விஜயா நடித்த கற்பகம் படம் ரிலீஸ் ஆனது. முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், எஸ்.எஸ் ராஜேந்திரன், உள்ளிட்டாருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

   

Actress K.R.Vijaya New information | சபரிமலை விவகாரம்: நடிகை கே.ஆர்.விஜயா பதில்

 

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கே.ஆர் விஜயா அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு முறை ஒரு படத்தின் மேக்கப் ஆடிஷன் நடைபெறும் போது கே.ஆர் விஜயா அங்கு சென்றுள்ளார். அப்போது எம்.ஆர் ராதா கே ஆர் விஜயாவிடம் உன் பெயர் என்ன என கேட்டுள்ளார். என் பெயர் தெய்வநாயகி என கே.ஆர் விஜயா கூறியுள்ளார். அதனை கேட்டதும் எம்.ஆர் ராதா அது என்ன தெய்வநாயகி, தையல்நாயகி அப்படின்னு.

MR Radha HD Images | mr ராதா

இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி உன் பேர விஜயா அப்படின்னு வச்சுக்கோ என கூறியுள்ளார். அவர் கூறியதிலிருந்து அப்பா அம்மா இனிஷியல் சேர்த்து தெய்வநாயகி என்ற பெயரை மாற்றி கே.ஆர் விஜயா என வைத்துக்கொண்டார். அதிலிருந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து சினிமாவின் உச்சத்திற்கு சென்றார். இன்றிலிருந்து இன்று வரை எம் ஆர் ராதா வைத்த கே ஆர் விஜயா என்ற பெயர்தான் நிலைத்து நிற்கிறது.

Sakthi Vikatan - 30 May 2023 - "எல்லாமே கடவுள் அருளால் நடந்தது!" - கே.ஆர். விஜயா | actress k.r.vijaya intervie about spiritual life - Vikatan