Categories: சினிமா

கல்கி படத்திற்கும் பகத் பாஸுலுக்கும் கனெக்ஷன் இருக்கா..? இது என்ன புது கதையா இருக்கு..!!

Spread the love

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ரிலீஸ் ஆன இரண்டு நாட்களில் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலை அள்ளி குவித்து வருகிறது. கல்கி படத்தில் என அழைக்கப்படும் சிறிய வகை பேசும் ரோபோ உள்ளது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் டப்பிங் பேசியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை கல்கி படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் தமிழகத்தை விட கேரளாவில் கல்கி படத்திற்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் மலையாள ஆடியன்ஸ் கல்கி படத்தை பகத் பாஸில் நடித்த ஆவேசம் படத்துடன் கனெக்ட் செய்து பார்த்துள்ளனர். ஆவேசம் படத்தில் பகத் பாசில் பேசும் எண்ட மோனே என்ற டயலாக் சூப்பர் ஹிட் ஆனது.

அதேபோல் கல்கி படத்தில் ரோபோட் புஜ்ஜி எண்ட மோனே என்ற டயலாக்கை பேசுகிறது. இதனால் மலையாள ஆடியன்ஸ் உற்சாகத்தில் உள்ளனர். கீர்த்தி சுரேஷ் புஜ்ஜி ரோபோவுக்கு அருமையாக டப்பிங் பேசியுள்ளார். மலையாளத்தில் டப்பிங் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் மலையாள ரசிகர்கள் கல்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். முதல் நாளில் கல்கி படம் கேரளாவில் 2.2 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

admin

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago