Connect with us

கல்கி படத்திற்கும் பகத் பாஸுலுக்கும் கனெக்ஷன் இருக்கா..? இது என்ன புது கதையா இருக்கு..!!

CINEMA

கல்கி படத்திற்கும் பகத் பாஸுலுக்கும் கனெக்ஷன் இருக்கா..? இது என்ன புது கதையா இருக்கு..!!

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கல்கி 2898 திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் மேற்கொண்ட டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள்! | Kalki 2898 AD: Actor Prabhas Diet And Fitness Journey for Kalki Movie - Tamil BoldSky

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ரிலீஸ் ஆன இரண்டு நாட்களில் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூலை அள்ளி குவித்து வருகிறது. கல்கி படத்தில் என அழைக்கப்படும் சிறிய வகை பேசும் ரோபோ உள்ளது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் டப்பிங் பேசியுள்ளார்.

   

கல்கி படத்திற்காக உருவாக்கப்பட்ட வாகனம்.. 'புஜ்ஜி' காரா இல்ல கப்பலா? சுவாரசிய தகவல் இதோ! | Intresting Facts About Bujji Car In Kalki 2898 AD Movie - Oneindia Tamil

 

தமிழகத்தை பொறுத்தவரை கல்கி படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் தமிழகத்தை விட கேரளாவில் கல்கி படத்திற்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் மலையாள ஆடியன்ஸ் கல்கி படத்தை பகத் பாஸில் நடித்த ஆவேசம் படத்துடன் கனெக்ட் செய்து பார்த்துள்ளனர். ஆவேசம் படத்தில் பகத் பாசில் பேசும் எண்ட மோனே என்ற டயலாக் சூப்பர் ஹிட் ஆனது.

Aavesham On OTT: Fahadh Faasil Starrer Release Date? | பஹத் பாசில் நடித்த 'ஆவேஷம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

அதேபோல் கல்கி படத்தில் ரோபோட் புஜ்ஜி எண்ட மோனே என்ற டயலாக்கை பேசுகிறது. இதனால் மலையாள ஆடியன்ஸ் உற்சாகத்தில் உள்ளனர். கீர்த்தி சுரேஷ் புஜ்ஜி ரோபோவுக்கு அருமையாக டப்பிங் பேசியுள்ளார். மலையாளத்தில் டப்பிங் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் மலையாள ரசிகர்கள் கல்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். முதல் நாளில் கல்கி படம் கேரளாவில் 2.2 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Is Keerthy Suresh dubbing for special character Bujji in 'Kalki AD 2898'? | 'கல்கி 2898 ஏ.டி.' : சிறப்பு கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்?

author avatar
Priya Ram
Continue Reading
To Top