#image_title
தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மீரா நந்தன் பிறந்து வளர்ந்ததெல்லாம் கொச்சியில் தான். சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் பின்னர் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான வீடு என்கின்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான முல்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அகில் ஹீரோவாக நடித்த வால்மீகி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படம் இவருக்கு சொதப்பிய காரணத்தினால் அடுத்த அடுத்த திரைப்படங்களும் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து தமிழில் நேர்முகம், சண்டமாருதம், காதலுக்கு மரணம் இல்லை, சூரிய நகரம் உள்ளிட்ட படங்களும் தொடர்ந்து தோல்வியை தான் தழுவியது.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்த இவருக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்காத காரணத்தினால் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். நடிகையாக மட்டும் இல்லாமல் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகின்றார்.
தொடர்ந்து மலையாள சினிமாவில் மற்றும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தனது நீண்ட நாள் காதலரான Beau Sreeju என்பவரை இன்று குருவாயூர் கோயிலில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்திருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…