அலகாபாத் உயர் நீதிமன்றம் விவாகரத்து வழக்கொன்றில் கணவருக்குச் சாதகமாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹோமியோபதி மருத்துவரான கணவர் மீது அவரது மனைவி வீட்டாரே துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கணவரின் வருமானத்தைப் பாதிக்கும் வகையில் மனைவியின் குடும்பத்தினரே செயல்பட்டுவிட்டு, பின்னர் அவரிடமே ஜீவனாம்சம் கேட்பது முறையல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட நபரிடமே பணம் கேட்பது அநீதியாகும் எனக் கூறி மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மனைவியின் தூண்டுதலால் கணவரின் உழைக்கும் திறன் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழலில் பராமரிப்புத் தொகை கோர சட்டத்தில் இடமில்லை என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மருத்துவரின் முதுகுத்தண்டில் இன்னும் துப்பாக்கிக் குண்டு தங்கியிருப்பதையும், அறுவை சிகிச்சை செய்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதையும் கருத்தில் கொண்ட நீதிமன்றம், கணவரின் உடல்நிலையைச் சிதைத்தவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கணவனின் கடமைகளைப் போலவே மனைவியின் நடத்தையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். இது போன்ற விசித்திரமான வழக்குகளில் உண்மைகளைக் கண்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…
ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம்…