இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும். இதைத்தொடர்ந்து, சாதி வாரியான கணக்கீடு உள்ளிட்ட இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027 பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கப்படும்.
வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வழியாக நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல் போன்ற பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இரண்டாம் கட்ட பணிகள் முன்கூட்டியே செப்டம்பர் மாதமே தொடங்கிவிடும். துல்லியமான தரவுகளைப் பெற்று மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முறையாகத் திட்டமிடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…