நடுவானில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. இனி ஹெட்ஃபோன் இல்லாம வீடியோ பார்த்தா அவ்ளோதான்.. புதிய விதியால் சிக்கிய பெண் பயணி.. கைதட்டி கொண்டாடிய பயணிகள்..!!!

Spread the love

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்திலிருந்து தம்பா நகருக்குப் புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஹெட்ஃபோன் அணியாமல் சத்தமாக வீடியோ பார்த்த பெண் ஒருவர் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டார்.

மேலும் விமான ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும், அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்புப் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். தான் மிகக் குறைந்த நேரம் மட்டுமே வீடியோ பார்த்ததாக அந்தப் பெண் வாதிட்ட போதிலும், விதிமீறல் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் விமான நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது பயணக் கொள்கைகளை மாற்றியமைத்துள்ளன, அதன்படி சக பயணிகளுக்குத் தொந்தரவு தரும் வகையில் சத்தமாக ஆடியோ அல்லது வீடியோக்களை ஹெட்ஃபோன் இன்றி கேட்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறிய அந்தப் பெண் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அங்கிருந்த சக பயணிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொது இடங்களில் மற்றவர்களின் அமைதியைக் கெடுக்கும் செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago