அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள ‘டாப் 10’ மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், இந்தியரான பத்ரேஷ் குமார் சேதன்பாய் படேல் இடம்பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஒரு டோனட்ஸ் உணவகத்தில் வைத்து தனது மனைவியான பாலக் படேலை கொடூரமாக கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தனது மனைவி இந்தியா திரும்ப விரும்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பத்ரேஷ் குமார் இக்கொலையைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெகுமதி தற்போது 1 மில்லியன் டாலராக சுமார் ரூ. 9.18 கோடி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளில் எஃப்.பி.ஐ-க்கு 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், பத்ரேஷ் குமாரைப் பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து துல்லியமான தகவல் கிடைத்தால் அது எஃப்.பி.ஐ-க்கு பெரும் வெற்றியாக அமையும் என்பதால், தற்போது இந்த பிரம்மாண்ட வெகுமதி தொகையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு இந்தியர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…