காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது தொடர்பான தகராறில் ஒரு ஆசிரியை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஹீனா பரி என்ற ஆசிரியை, தனது வளர்ப்பு நாயுடன் லிஃப்டில் செல்ல முயன்ற ஸ்வேதா என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்வேதா, ஆசிரியை ஹீனாவை மரக்கட்டையால் தாக்கியதுடன் சரமாரியாகக் கன்னத்தில் அறைந்து வன்முறையில் ஈடுபட்ட காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
லிஃப்டுக்குள் ஆசிரியை நிலைகுலைந்து போகும் அளவுக்குத் தாக்குதல் தொடர்ந்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டி கார்டு உடனடியாகத் தலையிட்டு ஸ்வேதாவைத் தடுத்து நிறுத்தி ஆசிரியையைக் காப்பாற்றினார். நாய்களை லிஃப்டில் அழைத்துச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடே இந்த வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/GreaterNoidaW/status/2099094882912735263/video/1
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை ஹீனா பரி, இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது மற்றும் பொது இடங்களைப் பயன்படுத்துவது குறித்த விதிகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…
ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…
குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…