இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை?…. விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்…. களத்தில் இறங்கிய அதிமுக… இத யாரும் எதிர்பார்க்கலையே….!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அவரது அரசின் மீதும் பிரதான எதிர்கட்சியான திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்திலோ அல்லது மக்கள் மன்றத்திலோ எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடி பதில்களைத் தருவதில்லை என்றும், பொறுப்புகளில் இருந்து விலகி ஓடுகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்த அரசியல் சூடான சூழலில்தான், பிரபல தனியார் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றின் போது பேசிய அவர், “தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்த வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை; அது ஏமாற்று வேலை” எனக் குறிப்பிட்டிருந்தார். இது பிக்பாஸ் வீட்டின் சூழலுக்கான கருத்து எனச் சொல்லப்பட்டாலும், நடப்பு அரசியலையும் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளையும் மறைமுகமாகச் சாடுவதற்காகவே விஜய் சேதுபதி இவ்வாறு பேசினார் எனத் தவெக ஆதரவாளர்களும் ரசிகர்களும் கொதித்தெழுந்து, இணையதளங்களில் அவரை உக்கிரமாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு எதிராகத் தவெகவினரின் எதிர்ப்பு வலைதளங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசும் வகையில் அதிமுக களமிறங்கியுள்ளது. அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கச் சட்டரீதியாக உறுதியுடன் துணை நிற்போம்” எனப் பதிவிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளார். தவெகவினர் வழக்கு தொடர்ந்தாலோ அல்லது சட்டரீதியான நெருக்கடிகளைக் கொடுத்தாலோ அதிமுக அவருக்கு ஆதரவாக நிற்கும் என்பதை உணர்த்தும் இந்த அறிக்கை, விஜய் சேதுபதியின் பேச்சைத் தாண்டி தவெக மற்றும் அதிமுக இடையிலான புதிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது

Nanthini

Recent Posts

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

5 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

6 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

15 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

21 minutes ago

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

37 minutes ago

“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…

41 minutes ago