“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், லட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே வீட்டில் லட்சுமியின் மாமனார் நத்துலால் பாலி (72) என்பவரும் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்த நத்துலால், தனது உடல்நலக் குறைவிற்கும் மகனின் இறப்பிற்கும் மருமகள் லட்சுமி செய்த சூனியமே காரணம் எனக் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், லட்சுமி வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த நத்துலால் அருகிலிருந்த கோடரியால் லட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு நத்துலால் வீட்டின் பின்புறமிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இக்கொலை வழக்கு குறித்து யசோதரா நகர் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

பரிசளிப்பு விழாவில் பரபரப்பு…! பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…

19 seconds ago

அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…

14 minutes ago

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

25 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

26 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

35 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

41 minutes ago